Published Date: August 13, 2023
CATEGORY: EVENTS & CONFERENCES
கொடைக்கானலில் நடந்த தென் மண்டல மகப்பேறு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார்.
மாநாட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ஹிரிஷி கேஷ்டிபை தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர். மாது ரிபடேல் முன்னிலை வகித்தார். அமைப்பு தலைவர் டாக்டர் ஜோதி சுந்தரம் வரவேற்றார். தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர். சம்பத்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடர்பாடுகள் நிறைந்த மிகவும் சிக்கலான சவாலான பிரசவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
டாக்டர்கள் பல்வேறு தலைப்புகளில் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்கள் சாதனை டாக்டர்களுக்கு விருதுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
அமைப்பு தலைவர் டாக்டர் ஹிரிஷிகேஷ்டிபை பேசுகையில் வட மாநிலங்களில் போதிய விழிப்புணர்வு இன்றி ஏராளமானோர் நோய்களுடன் வாழ்கின்றனர். இதில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன என்றார்.
அமைச்சர் தியாகராஜன் பேசுகையில் " வீடு தேடி மருத்துவம் பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. உயர் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்டவை தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது" என்றார்.
அமைப்புச் செயலாளர் டாக்டர்கள் கல்பனா நன்றி கூறினார்.
Media: Dinamalar